×

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

தேனி, செப். 26: தேனி நகராட்சிக்குட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியான கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான கடவுள் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை பாண்டிலட்சுமி வரவேற்றார். இதில் தேனி அல்லிநகரம் நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினார். இம்முகாமில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

The post தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dengue Awareness Camp ,Theni Karuvelnayakanpatti ,Theni ,dengue ,Government Kallar ,School ,Karuvelnayakanpatti ,Theni Municipality ,Theni Allinagaram… ,Theni Karuvelanayakanpatti ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த...