×

வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய பிரதிஷ்டை பண்டிகை அசன விருந்து

நாசரேத், செப். 26: நாசரேத் வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய 104வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 34வது அசன பண்டிகை விழா, 6 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு 7 மணிக்கு வாழ்க்கையின் வசந்த காலம்: அந்த காலமா? இந்த காலமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தனபால் குழுவினர் பட்டிமன்றத்தை நடத்தினர். 2வது, 3வது நாள் இரவு 7 மணிக்கு ஆவிக்குரிய நற்செய்தி கூட்டங்கள் நடந்தது. ஆலங்குளம் எழுப்புதல் ஜெப ஊழியங்களின் நிறுவனர் டேனியல் பீட்டர் செய்தி அளித்தார். 4வது நாள் மாலை 6.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் பரி. திருவிருந்து ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி, செய்தி அளித்தார். 5வது நாள் காலை 5.30 மணிக்கு அசன பண்டிகை மற்றும் பரி. திருவிருந்து ஆராதனை நடந்தது. சேகரகுரு ஹென்றி ஜீவானந்தம், செய்தி கொடுத்தார். மாலை 5 மணிக்கு அசன ஐக்கிய விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோருக்கு அசன விருந்து வழங்கப்பட்டது. 6வது நாள் இரவு 7 மணிக்கு சபையாரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஏற்பாடுகளை வகுத்தான்குப்பம் சேகர தலைவர் ஹென்றி ஜீவானந்தம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் தனபால், சபை ஊழியர் ஜாய்சன் மற்றும் வகுத்தான்குப்பம் சபையார், விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய பிரதிஷ்டை பண்டிகை அசன விருந்து appeared first on Dinakaran.

Tags : Vakhuthanguppam ,St. Matthew Temple Consecration Festival Asana Feast ,Nazareth ,104th Consecration Festival ,34th Asana Festival of St. Matthew Church ,Vakuthankuppam ,St. Matthew Church Consecration Festival Asana Feast ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்