×

மணி மண்டபத்தை மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தல்

 

ஈரோடு, செப். 26: சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல்ராமன் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணி மண்டபம் கட்ட மாவட்ட வருவாய்துறை நிலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, தேர்வு செய்யப்பட்ட இடமானது தீரன் சின்னமலை மணி மண்டபத்திற்கு அருகில் உள்ளது.
இந்த இடத்திற்கு பதிலாக மாற்று இடமான அரச்சலூர் கிராமமம் நல்லமங்காபாளையத்தில் உள்ள 2 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மணி மண்டபத்தை மாற்று இடத்தில் கட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Social Justice People's Party ,Vadivela Raman ,
× RELATED சிறுவலூர் வன்கொடுமை சம்பவத்தில் 20 பேரை கைது செய்ய வேண்டும்