×

திட்டக்குடி அருகே கதண்டு கடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி

திட்டக்குடி, செப். 26: திருச்சி மாவட்டம் சேட்டவாய்த்தலை முருகன் நகரைச் சேர்ந்த வெள்ளேந்தி மகன் நீலமேகம் (62). இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள டி.ஏந்தல் – வெங்கனூர் பகுதிகளில் செல்லும் பைப் லைனை ஆய்வு செய்து வந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கனூர் பாலம் அருகே செல்லும்போது அவரை கதண்டு கடித்துள்ளது. உடனடியாக நீலமேகம் அவரது அலுவலகத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உடனே அவருடன் பணிபுரியும் நபர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது நீலமேகம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தத நீலமேகம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திட்டக்குடி அருகே கதண்டு கடித்து முன்னாள் ராணுவ வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Phetakkudi ,Neelamegam ,Velendhi ,Murugan Nagar, Chetavaithal, Trichy District ,
× RELATED மாடு மோதி விபத்து: சிறப்பு உதவிஆய்வாளர் உயிரிழப்பு