×

எஸ்.எஸ்.குளம் வேளாண்மை மையத்தில் சிறுதானிய விழிப்புணர்வு வாகனத்தை ஒன்றியக்குழு தலைவர் துவக்கி வைத்தார்

 

அன்னூர், செப்.26: உலகம் முழுவதும் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக எஸ்.எஸ்.குளம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தின் சார்பில் வேளாண்மை துறை துணை இயக்குனர் புனிதா (மத்திய திட்டம்) தலைமையில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனம் பிரச்சாரம் நேற்று துவங்கியது. இந்த வாகனத்தை எஸ்.எஸ்.குளம் ஒன்றியக்குழு சேர்மன் கவிதா சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பிரச்சார வாகனம் மூலம் வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் வெள்ளமடை, வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், கீரணத்தம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வறட்சி காலங்களில் சோளம், கம்பு, திணை, ராகி உள்ளிட்டவற்றை பயிரிடுவதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது. அதே சமயத்தில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவு, பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபமும் கிடைக்கும். மேலும், நார்ச்சத்துக்கள் அதிகமாக சிறு தானியங்களில் உள்ளதால் சர்க்கரை உள்ளிட்ட நோயாளிகளுக்கு உகந்தது என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post எஸ்.எஸ்.குளம் வேளாண்மை மையத்தில் சிறுதானிய விழிப்புணர்வு வாகனத்தை ஒன்றியக்குழு தலைவர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : president ,SS Kulam Agriculture Centre ,International Year of Small Grains ,Union Committee ,S.S. Kulam ,Agriculture Center ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்