×

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 465 மனுக்கள் குவிந்தன

 

ஈரோடு, செப். 26: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 465 மனுக்கள் பெறப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 465 மனுக்கள் பெறப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். கூட்டத்தில், மாற்றுத்திறனாளின் நலத்துறையின் சார்பில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை கால்களையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நீரில் மூழ்கி உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ராஜகோபால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 465 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Collector ,Dinakaran ,
× RELATED பூரண மதுவிலக்கினை அமல்படுத்திட கோரி ஈரோடு கலெக்டரிடம் தமமுகவினர் மனு