×

காளையார்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காளையார்கோவில், செப்.26: புனித வின்சென்ட்தே பவுல் சபையின் புனித அருளானந்தர் கிளை சபையின் 30வது ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காளையார்கோவில் ஆலய முன்புற அரங்கில் நடைபெற்றது. கிளைத் தலைவர் லூர்துராஜ் தலைமை வகித்தார். சிவகங்கை மத்திய சபையின் தலைவர் சூசைராஜ், வட்டாரத் தலைவர் அருள், வட்டார பொருளாளர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர். ஆன்மீக ஆலோசகர் பங்குதந்தை சேசு சிறப்புரையாற்றினார். சபையின் கையேடை அந்தோணிசாமி வாசித்தார்.

கிளைத் தலைவர் லூர்துராஜ் அனைவரையும் வரவேற்றார். சபையின் கூட்ட அறிக்கையை கிளைச் செயலாளர் ஆரோக்கியசாமி வாசித்து ஒப்புதல் பெற்றார். விழாவில் பல்வேறு பள்ளிகளிலும் பயிலும் 22 மாணவ,மாணவிகளுக்கு தலா ரூ.1000 வீதம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. மூன்று நபர்களுக்கு திட்டக் கடனாக ரூ.20000 வழங்கப்பட்டது. 10 தத்து குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசியும் தலா ரூ.500 பண உதவியும் புதிய ஆடைகளும் வழங்கப்பட்டன. கிளை உறுப்பினர் பால் ஜோசப் நலத்திட்ட உதவிகளை தொகுத்து வழங்கினார்.

The post காளையார்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,St. Arulanandar ,St. Vincent Paul's Church ,Dinakaran ,
× RELATED காளையார்கோவிலில் நர்சிங் மாணவி தற்கொலை உறவினர்கள் போராட்டம்