×

புது பஸ் ஸ்டாண்டை செயல்படுத்த கோரி அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும். 60 கி.மீ எல்லைக்கு உட்பட்ட சுங்கச்சாவடிகளை கோர்ட் உத்தரவின்படி திருமங்கலம், எட்டூர்வட்டம் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். சட்ட ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் காவல் சார்பு ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தியாகிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா பெயரை மாற்றம் செய்ய கூடாது, பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கும் பாஜ அரசை கண்டிப்பதாக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பாலமுருகன், வெயிலுமுத்து, காளிதாஸ், வீரப்பெருமாள், காதர்முகைதீன், செல்வம், நல்லதம்பி, சுந்தர்ராஜன், மணிமாறன், எட்வர்ட், சுப்புராஜ், சுரேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post புது பஸ் ஸ்டாண்டை செயல்படுத்த கோரி அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Collectorate ,Muthukumar ,Communist Party of India ,
× RELATED காலி பணியிடங்களை நிரப்ப கோரி வருவாய்த்துறையினர் சங்கம் உண்ணாவிரதம்