×

பொதுத்தேர்வில் அசத்திய மாணவர்களுக்கு பரிசு

 

ராஜபாளையம், செப்.26: ராஜபாளையம் வெற்றிலை பாக்கு சிறு வணிகர்கள் நல சங்க ஆண்டு விழா நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டம் ராஜபாளையம் வெற்றிலை பாக்கு சிறு வணிகர்கள் நலச்சங்கத்தின் 37 வது ஆண்டு விழா ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசகர் வாசுதேவராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். சங்கச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

சங்க பொருளாளர் ஜீவா வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். தொழில் வர்த்தக சங்க செயலாளர் வெங்கடேசன் ராஜா மற்றும் நாணயம் சூப்பர் மார்க்கெட் கார்மேகம் வாழ்த்துரை வழங்கினர். நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். நிறைவாக ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

The post பொதுத்தேர்வில் அசத்திய மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Rajapalayam Betelnut Paku Small Traders Welfare Association ,Virudhunagar West… ,
× RELATED ராஜபாளையத்தில் வரதட்சணை எதிர்ப்பு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்