×

காட்சி பொருளான சிசிடிவி கேமராக்கள்

கடத்தூர், செப்.26: அரூர் போலீஸ் சப்-டிவிஷனில் கடத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புட்டிரெட்டிப்பட்டி, ரயில்வே ஸ்டேஷன், மணியம்பாடி, சுங்கரஹள்ளி, தாளநத்தம், தேக்கல்நாய்க்கன்பட்டி, வேப்பிலைபட்டி, கேத்துரெட்டிப்பட்டி என 38 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் நடைபெறும் வாகன விபத்துகள், வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டுபிடிக்கவும், இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், பொதுமக்கள்-வியாபாரிகள் ஒத்துழைப்புடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டது. அவை போலீஸ் ஸ்டேஷனில் உள்ள சர்வர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடத்தூர் நகர பகுதியில், பல்வேறு கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கபட்டதிலிருந்து பராமரிப்பு இல்லாததால் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. நகர பகுதியில் ஓரிரு இடங்களை தவிர வேறு எங்கும் கேமராக்கள் செயல்படுவதில்லை. இதனால் வாகன திருட்டு, கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். சிசிடிவி கேமராக்களை உரிய பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காட்சி பொருளான சிசிடிவி கேமராக்கள் appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Arur Police Sub-Division ,Putirettipatti ,Railway Station ,Maniambadi ,Sungarahalli ,Talanatham ,Kaduur Police Sub-Division ,Dinakaran ,
× RELATED டயர்களை எரித்ததால் பொதுமக்கள் அவதி