×

காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள காமாட்சி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் தீபாவளி-2023 சிறப்பு விற்பனையை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கோ-ஆப் டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935ம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து 88 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

மேலும், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனை மற்றும் அவர்களின் தேவைகளையறிந்து கைத்தறி ரகங்களை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்பில் உற்பத்தி செய்து 2022-2023ம் ஆண்டின் சுமார் ரூ.16.91 கோடி அளவிற்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பும் அளித்து வருகிறது. இந்த பாரம்பரிய மிக்க நெசவு தொழிலில் நவீன உத்திகளை கையாண்டு அறிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணம் கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி ரக சேலைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பருத்தி ரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லினன் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக்ஷன் போர்வைகள், காம்பிரே போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியன விற்பனைக்கு உள்ளன. கோ-ஆப் டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு, ரூ.7.07 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, தீபாவளி 2023ம் ஆண்டு பண்டிகை விற்பனை இலக்காக ரூ.14 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காமாட்சி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு 0.71 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கு ரூ.1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திருநாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி 2023 சிறப்பு விற்பனை அனைத்து கோ-ஆப் டெக்ஸ் விற்பனையங்களிலும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியுடன் கோலாகலமாக துவங்குகிறது.

தூயப்பட்டு மற்றும் அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுப்புடவைகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் பல வண்ணங்களில் சங்க விலைக்கே வழங்கப்படுகிறது. கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டோன் மேட் ஸ்கிரீன் துணிகள் தலையணை உறைவுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், கோ-ஆப் டெக்ஸ் மேலாளர் (உற்பத்தி & பகிர்மானம்) ஞானபிரகாசம், கோ-ஆப் டெக்ஸ் மேலாளர் பெருமாள், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Kanchipuram ,Kamachi ,Co-op Tex Station ,Tamil Nadu Handloom Weavers Cooperative Society ,Kamatchi Co-op Tex ,Gandhi Road, Kanchipuram ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட...