×

பெண் ஓதுவார்கள் நியமனம் பெரியாரின் நெஞ்சில் திராவிட மாடல் அரசு வைக்கும் ‘பூ’: அறநிலைய துறைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பெண் ஓதுவார்களுக்கு பணி ஆணை வழங்கியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் ஓதுவார் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பெண் ஓதுவார்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்ட பதிவு: சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் மற்றுமோர் மைல்கல். திமுகவின் சமூகநீதி சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம். சுருக்கமாக சொன்னால், திராவிட இயக்கப் பற்றாளர்கள் புகழ்வது போல், இது ‘பெரியாரின் நெஞ்சில் நமது திராவிட மாடல் அரசு வைக்கும் ‘பூ’. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை வாழ்த்துகிறேன்.

The post பெண் ஓதுவார்கள் நியமனம் பெரியாரின் நெஞ்சில் திராவிட மாடல் அரசு வைக்கும் ‘பூ’: அறநிலைய துறைக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : BC ,G.K. ,Stalin ,Chennai ,Chief Minister of State ,Hindu Religious Foundation ,G.K. Stalin ,Hindu ,Periyar ,State Department ,
× RELATED தமாகா எந்த கூட்டணியிலும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி