அரியலூர்: அரியலூரில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி:பாஜவிலிருந்து அதிமுக விலகியது மகிழ்ச்சி. காவிரியில் தண்ணீர் தற்போது வரவில்லை. பாஜ, காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை. அவர்களுடன் கூட்டணி வைப்பது கூடுதல் சுமை. பாஜவுடன் கூட்டணி இல்லை என ஜெயலலிதா ஏற்கனவே முடிவெடுத்தார். அந்த வகையில் தற்போது அதிமுக காலம் தாழ்த்தி முடிவெடுத்துள்ளது. இது போன்ற முடிவுகளை அதிமுக மட்டுமே எடுக்கும். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததற்கு காங்கிரஸ், பாஜ போராடவில்லை. அப்படி இருக்கையில் ஏன் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும். அண்ணாவை குறைசொல்லி பேசியதற்கு இப்படி ஒரு முடிவை அதிமுக எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜவுடன் கூட்டணி முறிவு அதிமுகவின் காலம் தாழ்ந்த முடிவு: சீமான் பேட்டி appeared first on Dinakaran.