×

உதயநிதி குறித்து அவதூறு பேச்சு: இந்து முன்னணி தலைவர்கள் கைது

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே கடந்த 22ம் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் வேலூரை சேர்ந்த இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரணி நகர திமுக செயலாளர் ஏ.சி.மணி, டவுன் போலீசில் கடந்த 23ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, வேலூர் சத்துவாச்சாரியில் வசிக்கும் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷை அவரது வீட்டில் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

இதேபோல, சேலம் கோட்ட இந்து முன்னணி தலைவர் சந்தோஷ்குமாரும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறாக பேசியதாக புகாரின்படி தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை பட்டைக்கோயில் அருகே வந்த சந்தோஷ்குமாரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

The post உதயநிதி குறித்து அவதூறு பேச்சு: இந்து முன்னணி தலைவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Udayanidhi ,Hindu ,Vellore ,Arani Anna ,Tiruvannamalai district ,Hindu Front ,
× RELATED எந்த சர்வதேச போட்டிகள் என்றாலும்...