×

இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை திறக்க வேண்டும்: விசிக சார்பில் கலெக்டரிடம் மனு

மதுராந்தகம்: இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்கறிஞர், ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர், பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, திங்கள் இதழையும் நடத்தியவர், சென்னைப் மாகாண சட்டசபை உறுப்பினராக 1923ம் ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை இருந்த ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தேம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பல மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இந்த மணிமண்டபத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சமி நிலம் மீட்பு போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஜான் தாமஸ், ஏழுமலைக்கு மணிமண்டபம் கட்ட இந்த மாவட்டத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அச்சிறுப்பாக்கம் மதுராந்தகம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள தலித் குடும்பங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் ராகுல்நாத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய மாவட்ட பேரூர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post இரட்டைமலை சீனிவாசன் மணி மண்டபத்தை திறக்க வேண்டும்: விசிக சார்பில் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Twin Hill ,Srinivasan Mani Mandapam ,Vishika ,Madhurantagam ,Twin Hill Srinivasan Bell Hall ,Liberation Tigers Party District Secretary District… ,Dinakaran ,
× RELATED என் சொந்த தொகுதியான...