- போரூர்
- ராமாபுரம் அரசு
- டாக்டர்
- பாலு
- அமைச்சர்கள்
- பூந்தமல்லி
- டாக்டர்
- மகேஷ் பொய்யாமோசி
- எம் சுப்பிரமணியன்
பூந்தமல்லி: போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகளை டி.ஆர்.பாலு, எம்பி, அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, சென்னை மாநகராட்சி 11வது மண்டலத்தில் 151 வது வார்டுக்கு உட்பட்ட சின்னப்போரூர் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் கட்டுமான நிறுவனம் சார்பில், ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடம், 154வது வார்டுக்கு உட்பட்ட ராமாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், மதுரவாயல் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் உணவுக்கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று சின்னப் போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி தலைமை தாங்கினார். இவ்விழாவில் பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், வளசரவாக்கம் மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன், வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் துரை வீரமணி, மாமன்ற உறுப்பினர்கள் செல்வகுமார், செல்விரமேஷ், ஹேமலதாகணபதி, சங்கர்கணேஷ், சாந்தி ராமலிங்கம், மாலினி, ஸ்டாலின், ரமணிமாதவன் மற்றும் திமுக நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post போரூர், ராமாபுரம் அரசு பள்ளிகளில் ரூ.3.42 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.