×

அதிமுகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன் அண்ணன்

சென்னை: நயினார் நாகேந்திரன் அண்ணன் வீரபெருமாள் நயினார் நேற்று எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஜக துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரனின் மூத்த சகோதரார் வீரபெருமாள் நயினார்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசனும் நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, அமைப்புச் செயலாளர் ஏ.கருப்பசாமி பாண்டியன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை சூ.கணேசராஜா, கடம்பூர் ராஜூ உட்பட பலர் இருந்தனர்.

The post அதிமுகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன் அண்ணன் appeared first on Dinakaran.

Tags : nayanar nagendran ,andan ,nayanar nagendran annan ,naenar ,edapadi ,Director General Secretary ,Nayanar Nagendran Anne ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...