×

4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தொழில்துறை ஆணையராக இருந்த அர்ச்சனா பட்நாயக் சிறு, குறு மற்றும் நடுத்தர துறை செயலாளராகவும், புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையராக இருந்த நிர்மல் ராஜ் தொழிற்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதைப்போன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி, கனிம வளத்துறை ஆணையாகரவும், ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக இருந்த ஹர்சகாய் மீனா உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IAS ,Chennai ,Tamil Nadu ,PA ,Chief Secretary ,Shivdas Meena ,US ,
× RELATED நிவாரண பொருட்களை தேவைப்படும்...