×

முட்டுக்காடு பண்ணை வீட்டில் ஒடிசா வாலிபர் அடித்து ெகாலை?.. மேலாளரிடம் விசாரணை

துரைப்பாக்கம்: சென்னை அடுத்த முட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே ஹங் அவுட் என்கிற பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் தீபக் (46). இந்த வீட்டை பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு வாடகை விடுவது வழக்கம் என கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்ன (25), இந்த பண்ணை வீட்டில் கடந்த ஒரு மாதமாக கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சம்பள பாக்கி வாங்குவதற்காக இவர், பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பண்ணை வீட்டின் மேலாளராக பணிபுரியும் உத்தண்டியைச் சேர்ந்த விஜய் (29) என்பவர் முன்னாவின் சடலத்தை தோளில் தூக்கிச் சென்று முட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே வீசி விட்டு சென்றுள்ளார். இதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பண்ணை வீட்டின் மேலாளர் விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னா வீட்டின் பின்புறம் இருக்கிற சந்திப்பில் வந்தபோது மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரிவித்தார். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post முட்டுக்காடு பண்ணை வீட்டில் ஒடிசா வாலிபர் அடித்து ெகாலை?.. மேலாளரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Muttukadu ,Durai Pakkam ,Hang Out ,Muttukkadu ,Chennai ,Odisha ,Dinakaran ,
× RELATED லீசுக்கு வீடு விடுவதாக கூறி கோடிக் கணக்கில் மோசடி: தம்பதி மீது புகார்