×

கும்மிடிப்பூண்டி அரசு பள்ளிகளை சேர்ந்த 271 மாணவர்களுக்கு சைக்கிள்கள்: எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு அரசுப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு 271 விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் 120 மாணவர்களுக்கும், மாதர்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 126 மாணவிகளுக்கும், கண்ணன்கோட்டை அரசு பள்ளியைச் சேர்ந்த 25 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், ஒன்றியக்குழு துணை தலைவர் மாலதி குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதாம்மா முத்துசாமி, தலைமை ஆசிரியர் தனஞ்செயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லாரன்ஸ், மூர்த்தி, சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு, ஆரோக்கிய மேரி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லாவண்யா, மோகன் பாபு, போந்தவாக்கம் நாகராஜ், வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கினார். முடிவில் துணை தலைமை ஆசிரியர் அகஸ்டின் ஏசுராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.

The post கும்மிடிப்பூண்டி அரசு பள்ளிகளை சேர்ந்த 271 மாணவர்களுக்கு சைக்கிள்கள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi government schools ,MLA ,Kummidipoondi ,DJ Govindarajan ,Patirivedu Government School ,
× RELATED தனியார் தொழிற்சாலையில் இருந்து...