×

மாதவரம் பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: மாதவரம் சூர்யா கார்டன் பகுதியில் ₹7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். மாதவரம் மண்டலம், 27வது வார்டுக்கு உட்பட்ட சூர்யா கார்டன் பகுதியில் உயர் மின்னழுத்த பிரச்னையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். எனவே, இப்பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், மணலி மின்வாரிய அலுவலகம் சார்பில், ₹7 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இதற்கான பணிகள் முடிவடைந்ததையொட்டி இந்த மின்மாற்றியை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வார்டு கவுன்சிலர் சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நந்தகோபால், மணலி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கதிரவன், உதவி பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாதவரம் பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Madhavaram ,Thiruvottiyur ,Madhavaram Surya Garden ,Sudarsanam MLA ,Dinakaran ,
× RELATED மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு...