×

பள்ளத்தில் விழுந்த பைக் எரிந்து நாசம்

திருவொற்றியூர்: எர்ணாவூரில் பள்ளத்தில் விழுந்த பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (65). சென்னை துறைமுகத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு, பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். எர்ணாவூர் முல்லை நகர் அருகே சென்றபோது, அங்கிருந்த பள்ளத்தில் பைக் இறங்கியதால் நிலை தடுமாறி, கீழே விழுந்தார்.

இதில் சுகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பைக் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பைக்கில் பற்றிய தீயை அனைத்தனர். இருப்பினும் பைக் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து எண்ணூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளத்தில் விழுந்த பைக் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Ernavur ,Sukumar ,Ernavur Bhajanai Koil Street.… ,
× RELATED திருவொற்றியூர், மணலி பகுதிகளில்...