×

பாண்டரவேடு கிராமத்தில் ஆடுகளின் ஓய்விடமான பயணிகள் நிழற்குடை: சீரமைக்க வலியுறுத்தல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே பாண்டரவேடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பேருந்துகள் மூலமாக திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு பயணிகளின் வசதிக்காக, கடந்த 2014ம் ஆண்டு அரசு நிதியில் ஒரு பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது. அங்கு பேருந்துகள் நின்று செல்லாததால், நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டது. இதனால் அந்த நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சேதமாகி, தற்போது ஆடுகள் தங்கி ஓய்வெடுக்கும் இடமாக மாறிவிட்டது.

இதனால் அப்பேருந்து நிழற்குடையில் மழை மற்றும் வெயில் காலங்களின்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இப்பேருந்து நிழற்குடையை சீரமைக்கவும், அங்கு பேருந்து நின்று செல்லவும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, இப்பேருந்து நிழற்குடையை மீண்டும் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர சீரமைத்து, அங்கு பேருந்து நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பாண்டரவேடு கிராமத்தில் ஆடுகளின் ஓய்விடமான பயணிகள் நிழற்குடை: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bandaravedu Village ,Pallipattu ,Bandaravedu ,Tiruthani ,Nizhalkudai ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை