×

சென்னை ஏர்போர்ட்டில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில், ரூ.250 கோடியில் 2.5 லட்சம் சதுரஅடி பரப்பில் 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியில் இருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்குதான் இருசக்கர வாகனங்கள் உட்பட வாகனங்கள் அனைத்தும் நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வருபவர்கள் மற்றும் பல்வேறு பணி நிமித்தமாக வரும் தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள், தங்களது வாகனங்களை சென்னை சர்வதேச முனைய வருகை பகுதி, புறப்பாடு பகுதி, உள்நாட்டு முனைய வருகை, புறப்பாடு பகுதிகளில் நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை விமான நிலையம் தொடங்கியுள்ளது. இதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்த தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், ரெக்கவரி ஒன்றில், விமான நிலைய வளாகத்துக்குள் ரோந்து வந்து, அத்துமீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஏற்றி, பார்க்கிங் பகுதியில் விடுகின்றனர். அங்கு இருசக்கர வாகனங்களுக்கு ரூ.100, கார்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

அதற்கு பிறகு வாகனம் விடுவிக்கப்படுகிறது. மல்டி லெவல் 6 அடுக்கு கார் பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.20, அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கு ரூ.90 வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு குறைந்தபட்சம் ரூ.75 எனவும், 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. அபாரத தொகையை தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post சென்னை ஏர்போர்ட்டில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Meenambakkam ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் 9...