×

நிசான் மேக்னைட் கியூரோ எடிஷன்

நிசான் இந்தியா நிறுவனம், மேக்னைட் கியூரோ எடிஷன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான முன்பதிவும் துவங்கி விட்டது. இந்த கார் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பை ஸ்பெஷல் எடிஷனாக இது வருகிறது. ஜப்பான் மொழியில் கியூரோ என்றால் கருப்பு என பொருள். பெயருக்கு ஏற்ப கருப்பு தீமுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கார், மேக்னைட் எக்ஸ்வி எம்டி, மேக்னைட் டர்போ எக்ஸ்வி எம்டி மற்றும் மேக்னைட் டர்போ எக்ஸ்வி சிவிடி ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும்.

காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டிருக்கும், ஹெட்லாம்ப், அலாய் வீல்கள், கிரில், ஸ்கிட் பிளேட், இன்ஸ்ட்ரூமென்டல் பேனல் என அனைத்தும் கருப்பு நிற தீம் உடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெறுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் கார் அறிமுகமாகும் எனவும், அப்போது விலை மற்றும் பிற விவரங்கள் வெளியிடப்படும் எனவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post நிசான் மேக்னைட் கியூரோ எடிஷன் appeared first on Dinakaran.

Tags : Nissan ,Nissan India ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...