×

சென்னை வேப்பேரி பகுதியில் சாலையோரத்தில் இருந்து நடராஜர் சிலை கண்டெடுப்பு: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை வேப்பேரி பகுதியில் சாலையோரத்தில் இருந்து நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோணிப்பையில் சுற்றிக்கிடந்த நடராஜர் சிலையை துப்புரவு பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

சென்னை சூளை பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் துப்புரவு பணியாளர்கள் பரமேஸ்வரி மற்றும் கௌரி ஆகியோர் குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தபோது கோணிப்பையில் 3 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை இறைப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இந்த சிலை தொடர்பாக தங்களது ஆய்வாளர் தேவதாஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உடனடியாக நடராஜர் சிலையை அருகில் உள்ள வேப்பேரி காவல்துறையிடம் துப்புரவு ஆய்வாளர் ஒப்படைத்து இதுதொடர்பாக புகாரையும் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலையில் அதிகப்படியான மண் படர்ந்திருப்பதால் சிலை கடத்தல்காரர்கள் யாரேனும் சிலையை வீசி சென்றனரா, அல்லது கோவிலில் இருந்து திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கிடைக்கப்பெற்ற சிலை பழங்கால சிலையா அல்லது பித்தளை சிலையா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சிலை குறித்து விசாரணை மேற்கொண்டு அதன் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் விசாரணையை ஒப்படைக்க வேப்பேரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post சென்னை வேப்பேரி பகுதியில் சாலையோரத்தில் இருந்து நடராஜர் சிலை கண்டெடுப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nataraja ,Chennai ,Vepperi ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...