சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை தொடங்கியது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்தல்:
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். பாஜக கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர் மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜக கூட்டணியை கைவிட வலியுறுத்தியுள்ளனர்.
பாஜக கூட்டணி வேண்டாம்: அதிமுக மாவட்ட செயலாளர்கள்
கூட்டணி முறிவு அல்லது கூட்டணியை தொடர பாஜகவுக்கு நிபந்தனை விதிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலை பேசியதால் ஏற்பட்ட சர்ச்சை ஒரு வாரத்துக்கு மேலாக நீடிக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். அண்ணா பற்றி அவதூறாக பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுக கோரிக்கையை பாஜக உதாசீனப்படுத்திவிட்டது. அதிமுக 2-ம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்களும் அண்ணாமலை, பாஜக குறித்து மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பழனிசாமி:
கூட்டணி இல்லை என ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறும் அதே நேரத்தில் அதிமுக – பாஜக இடையே பிரச்சனை இல்லை என செல்லூர் ராஜு பேட்டியளித்தார். கூட்டணிக்காக இறங்கிப் போக முடியாது என அண்ணாமலையும் உறுதி காட்டுவதால் கூட்டணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பை முடிவுக்கு கொண்டுவர ரகசியமாக மேற்கொண்ட டெல்லி பயணம் அம்பலமானதால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அடைந்தனர்.
பாஜக கூட்டணியை தொடர்வதா? முறிப்பதா? – அதிமுகவில் குழப்பம்:
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் செய்தி வெளியானது. மற்றொரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறுவதால் முடிவெடுப்பதில் சிக்கல் தொடர்ந்தது.
கூட்டணி முறிவா? அண்ணாமலைக்கு கண்டன தீர்மானமா?
ஏற்கனவே ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்தபோதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டினார். ஜெயலலிதா பற்றிய விமர்சனத்துக்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கட்சியின் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாகவும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கேட்ட பின்பு முடிவுகளை அறிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரனின் அண்ணன் அதிமுகவில் இணைகிறார்:
பாஜக. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் அண்ணன் நயினார் வீரப்பெருமான் அதிமுகவில் இணைகிறார். அதிமுக-பாஜக மோதல் வலுத்துள்ள நிலையில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக உள்ள நயினாரின் அண்ணன் கட்சி மாறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசனும் அதிமுகவில் இணைகிறார்.
The post கூட்டணி முறிவா? அண்ணாமலைக்கு கண்டன தீர்மானமா?: அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.