×

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு!

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கன்னட அமைப்புகள் நாளை முழு அடைப்பு நடத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை பந்த் நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கு ஏற்ப சென்னை, பெங்களுருவில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்றிரவு 8 மணி முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : chennai ,bangalore ,Kannadha ,
× RELATED சென்னை, பெங்களூர், வேலூர் உள்ளிட்ட...