×

குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளியில் வீட்டின் சுவர் இடிந்து விபத்து: பெண் பலி

வேலூர்: குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஞானம்மாள் (55) என்பவர் உயிரிழந்தார். குடியாத்தம் அடுத்த உப்பரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி ஞானம்மாள் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

இன்று காலை வீட்டின் வெளிப் புறத்தில் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சுவர் சரிந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளியில் வீட்டின் சுவர் இடிந்து விபத்து: பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Gyanammaal ,Dinakaran ,
× RELATED வேலூர் மாநகராட்சியில் மார்ச்...