×

இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் செப்.26 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லைக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் பெரிய வேறுபாடு உள்ளது என்று சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்

செப். 28ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும். பேச்சுவார்த்தையில் காலம் தாழ்த்துவது போல் தெரிகிறது, அதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும் பேச்சுவார்த்தைக்குப் பின், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொருளாளர் கண்ணன் பேட்டி அளித்துள்ளார்

 

The post இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி appeared first on Dinakaran.

Tags : Chennai ,PTI ,Chennai Leadership ,
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை...