×

புதுச்சேரி மாநில புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்: தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மாற்றப்பட்டு, புதிய தலைவராக செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் 3 முறை பதவி வகித்து வந்தார். புதிய தலைவர் மாற்றுவதற்கான நடவடிக்கை என்பது கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டமன்ற தேர்தல் காரணமாக பணிகள் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில பாஜகவின் புதிய தலைவராக செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். செல்வகணபதி தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இவர் ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிரியர் பணியாளருமான இவர், தனியார் பள்ளியில் நிர்வாகியாக இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்துள்ளார். இதன் அடிப்படையிலேயே செல்வகணபதி புதுச்சேரி பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மேகாலயா மற்றும் புதுச்சேரி மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post புதுச்சேரி மாநில புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம்: தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry State ,BJP ,President ,Selvaganapathy ,National BJP ,JP Natta ,Puducherry ,Saminathan ,M.P. ,
× RELATED காதல் தோல்வியால் விரக்தியடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை