×

காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு நாடியது . தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்தது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் அவர் கூறியதாவது, உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளித்திருக்கிறதோ அதற்கு கீழ்ப்படிய வேண்டியது அரசியல் நெறி அதை அவர்கள் ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

The post காவிரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Minister ,Duraimurugan ,CHENNAI ,Water Resources ,Cauvery… ,Kuruvai ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடி