×

விடுமுறை தினமான நேற்று திரண்டனர் ஏலகிரி மலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி : ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் விடுமுறை தினத்தினையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலா தலமாக போல் ஏலகிரி அமைந்துள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களையும் கண்டு பொழுது போக்கி செல்கின்றனர்.

ஏலகிரி மலை உயர்ந்த மலைப்பகுதியில் இயற்கை நிறைந்த சூழலில் நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு இதன் மத்தியில் 14 கிராமங்களை உள்ளடக்கிய தனிய ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு காலநிலை குளிர்ந்த நிலையில் ஒரே மாதிரியாக நிலவுவதால் இங்கு ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இம்மலையில் அரசு சுற்றுலா தலங்களும், தனியார் சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. மேலும் இங்கு அரசு சார்பில் புதிய சுற்றுலா தலம் அமைக்க 7 ஏக்கரில், ₹3 கோடி மதிப்பீட்டில் சாகச விளையாட்டு தலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத்தொடர்ந்து 100 ஏக்கரில் பொட்டானிக்கல் கார்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வார இறுதி நாட்களான சனிக்கிழமை, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு இல்லம், சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, சாகச விளையாட்டு தலம் ஆகிய பகுதிகளில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் இம்மலையில் பலாப்பழம், நெல்லிக்காய், மாம்பழம், சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது சீத்தாப்பழம் சீசன் துவங்கி உள்ளது.

மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பொது இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் அமைக்க கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து படகு இல்லத்தில் அமைந்துள்ள கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விடுமுறை தினமான நேற்று திரண்டனர் ஏலகிரி மலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Elagiri Hill ,Elagiri ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு!!