×

திருப்பதியில் 2,500 பணியாளர்கள் கொண்டு தூய்மை பணிகள்

*கருட சேவையில் 136 டன் குப்பைகள் அகற்றம்

திருமலை : திருப்பதி பிரமோற்சவத்தில் 2500 பணியாளர்கள் கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அதிகாரி தேவி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் 2,500 பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதாக தேவஸ்தான சுகாதார அதிகாரி தேவி தெரிவித்தார். திருமலை, ராம்பகிஜா ஓய்வறை-2ல் உள்ள ஊடக மையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:

திருப்பதி ஏழுமலையான் பிரமோற்சவத்தில் 2500 தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பிரமோற்சவத்திற்காக 8 நாட்களுக்கு 243 பேரும், கருடசேவைக்கு 774 பணியாளர்கள் கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கருட சேவையில் மொத்தம் 136 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. ரத உற்சவத்தில் மாட வீதிகளில் மணல் அள்ள 278 கூடுதல் பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க 230 இடங்களில் குடிநீர் குழாய்கள் உள்ள நிலையில் பிரமோற்சவத்தில் மேலும் 187 இடங்களில் கூடுதல் மையங்களில் அமைக்கப்பட்டது.

இதில் கருட சேவையில் பக்தர்களுக்கு 681 வாரி சேவகர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. திருமலையில் குடிநீர் மற்றும் உணவின் தரம் குறித்து கர்னூலில் உள்ள மண்டல ஆய்வகம் மற்றும் திருமலையில் உள்ள தேவஸ்தான உணவு ஆய்வகத்தின் வல்லுநர்கள் ஆவ்வப்போது ஆய்வு செய்துள்ளனர். ஓட்டல்களில் உணவு தரம் குறித்து பக்தர்களிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஓட்டல்களில் விலைப்பட்டியலைக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து பைய முதன்மை மருத்துவ அதிகாரி நர்மதா பேசியதாவது: பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்க திருமலையில் அஷ்வினி மருத்துவமனையுடன் 6 மருந்தகங்களும், 6 முதலுதவி மையங்களும் உள்ளன. பிரமோற்சவத்திற்காக கூடுதலாக 8 முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுவிம்ஸ், பர்ட் மற்றும் ருயா மருத்துவமனைகளில் இருந்து 40 மருத்துவர்கள் மற்றும் 35 துணை மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் 13 ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

கருட சேவையில் 4,800 பேருக்கு மருத்துவ சேவை வழங்கியுள்ளோம். மாட வீதிகளில் பேட்டரி வாகனங்களில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு மருந்துகளை விநியோகித்துள்ளோம். சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரி அன்று வராஹசுவாமி கோயிலில் மருத்துவக் குழுவினருடன் ஆம்புலன்ஸ் ஒன்றும், புதிய பரக்காமணி அருகே மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பக்தர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் அஸ்வினி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் குசுமகுமாரி, ஏ.பி.ஆர்.ஓ பி.நீலிமா ஆகியோர் உடனிருந்தனர்.

The post திருப்பதியில் 2,500 பணியாளர்கள் கொண்டு தூய்மை பணிகள் appeared first on Dinakaran.

Tags : Tirappati ,Varta Service Thirumalai ,Tirapati Pramozavam ,Thirupati ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் கங்கனா தரிசனம்