×

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்… அடுத்த ஆண்டு முதல் ஏர்பாட்ஸ் உற்பத்தி தொடக்கம்..!!

டெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை 5 ஆண்டுகளில் 5 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்கள் அண்மையில் விற்பனைக்கு வந்தன. கடந்த நிதியாண்டில் ரூ.58 கோடி மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஏர் பாட்கள் தயாரிப்பில் இந்தியாவில் தொடங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளில் இந்தியாவில் தனது உற்பத்தியை 5 மடங்காக உயர்த்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் அந்நிறுவனம் ரூ.3.25 கோடி மதிப்பிலான பொருட்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ரூ.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் இருந்து மொபைல் போன்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ள நிலையில், ஐபோன் 15 சீரிஸின் விற்பனை, ஐபோன் 14 தொடருடன் ஒப்பிடும்போது 100% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்… அடுத்த ஆண்டு முதல் ஏர்பாட்ஸ் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Apple ,India ,Delhi ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...