×

இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல்: தேசிய மூவர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்

சென்னை: தேசிய மூவர் கூடைப்பந்து போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மூவர் கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 30 ஆடவர் அணிகள், 20 மகளிர் அணிகள் என மொத்தம் 50 அணிகள் கலந்துகொண்டன.

லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்ற தமிழ்நாடு ஆடவர் அணி இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதியது. 10 நிமிடம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் தமிழ்நாடு அணி 17-16 என்ற புள்ளிகணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக நடைபெற்ற மகளிர் பிரிவு ஆட்டத்தில் 20-15 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி கேரளா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

The post இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல்: தேசிய மூவர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,national trio basketball tournament ,Punjab ,CHENNAI ,trio basketball ,India ,Punjab team ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27...