×

குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்!

*குதிரைவாலி அரிசி, கேரட், பட்டாணி, பீன்ஸ், வெங்காயம், தேங்காய் பால், முந்திரி பருப்பு சேர்த்து குதிரைவாலி புலாவ் செய்யலாம்.
*வரகு அவல், சோள அவல், வேகவைத்த கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து சிறு தானிய அவல் உப்புமா தயாரிக்கலாம்.
*சோள அரிசி, சோள அவல், புளித்த தயிர், சர்க்கரை சிட்டிகை சேர்த்து அவல் தோசை செய்யலாம்.
*வெள்ளை சோளம், மக்காச் சோளம், வெங்காயம், வெள்ளரிக்காய், துருவிய கேரட் சேர்த்து சோள மசாலா பொரி தயாரிக்கலாம்.
*பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டைப் போட்டால் குழம்பில் கசப்பே தெரியாது.
*கிரேவி வகைகள் செய்யும் போது இரண்டு கரண்டி வேர்க்கடலைத் தூள் கலந்தால் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
*பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பூரி செய்தால் மொறு மொறுவென இருக்கும்.
*இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு ஒரு சுற்று அரைத்து எடுத்தால் சுவையான வெங்காய சட்னி தயார்.
*சேனைக்கிழங்கின் துவர்ப்பு குறைய அதனை புளி கலக்கிய நீரில் போட்டு விட்டு சமையலுக்கு பயன்படுத்துங்கள்.
– எஸ். சிவப்பிரகாசம்

The post குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள்...