×

நீலகிரியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்ததை அடுத்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை..!!

நீலகிரி: நீலகிரியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்ததை அடுத்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட புலிகள் உள்ள நிலையில் அவற்றை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை 6 புலிக்குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தன.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில் புலிகள் உயிரிழப்பு குறித்து தமிழக வனத்துறை உயர்மட்ட குழு விசாரிக்க வேண்டும் என சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 10 புலிகள் உயிரிழந்ததை அடுத்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகள் உயிரிழந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், வெளி மண்டல துணை கள இயக்குனர்களிடம் ஆணைய குழுவினர் விசாரணை. நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் உள்ளிட்டோரிடம் தேசிய புலிகள் ஆணைய குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post நீலகிரியில் 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்ததை அடுத்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,National Tiger Commission ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க செயற்கை குளங்கள்