×

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெண்கலத்தை கைப்பற்றிய இந்தியா; துடுப்பு படகு போட்டியிலும் வெண்கலத்தை வென்றது!!

பெய்ஜிங்: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் இந்திய வீரர்கள் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

2-வது நாளான இன்று 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் ருத்ரன்ஷ் பாட்டீல், திவ்யன்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வரி தோமர் அடங்கிய இந்திய ஆடவர் அணி மொத்தமாக 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா தங்கத்தை வென்றது. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களின் வெற்றி புதிய சாதனையாகவும் மாறியுள்ளது.

இதுவரை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் உலகா சாம்பியன்ஷிப் தொடரின் போது சீனாவின் 1893.3 புள்ளிகளே அதிக புள்ளிகள் என்ற சாதனையாக இருந்தது. அதனை இந்திய அணி வீரர்கள் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் சாதனையை முறியடித்துள்ளனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.

துடுப்பு படகு: அதேபோல் இன்று காலை நடைபெற்ற ஆடவர் துடுப்பு படகு காக்லெஸ் 4 பிரிவில் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர். ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதி போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41s நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.

இந்நிலையில், இந்தியாவுக்கு துப்பாக்கிச்சூடுதலில் மேலும் ஒரு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

The post ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெண்கலத்தை கைப்பற்றிய இந்தியா; துடுப்பு படகு போட்டியிலும் வெண்கலத்தை வென்றது!! appeared first on Dinakaran.

Tags : Asian Sports Match ,India ,Beijing ,Asian Games ,Contest ,Dinakaran ,
× RELATED ஜி20 மாநாட்டில் சீன பிரதமர் பங்கேற்பு