×

சனிதோறும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.38.70 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, செப்.25: திருச்சி விமான நிலையத்தில் ரூ.38.70 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மாலை துபாய் மற்றும் மலேசியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த பயணிகள் வந்து சேர்ந்தனர். அதில் துபாயில் இருந்து வந்த ஆண் பயணி கொண்டு வந்த உடைமையில் ரோலர்பேக்கில் தங்கம் இருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதேபோல் மலேசியாவில் இருந்து வந்த பெண் பயணியின் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வந்த பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 646 கிராம் எடையுள்ள ரூ.38.70 லட்சம் மதிப்பிலான தங்கம், ஆப்பிள் ஐபோன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post சனிதோறும் திருச்சி விமான நிலையத்தில் ரூ.38.70 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி – பெங்களூரு செல்ல வேண்டிய...