×

கலைஞர் நூற்றாண்டு வாலிபால் போட்டி கொடுக்கூர் கோபி பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசு

அரியலூர், செப். 25: அரியலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு பணி மற்றும் அரியலூர் மாவட்ட கையுந்து வந்து கழகம் இணைந்து டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வாலிபால் போட்டி நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 38 அணிகள் இப்போட்டியில் பங்கு பெற்றனர். இதில் கொடுக்கூர் கோபி பிரதர்ஸ் முதல் பரிசும், இடையாக்குறிச்சியை சேர்ந்த எஃப் பி சி இரண்டாம் பரிசும், வளவெட்டி குப்பத்தை சேர்ந்த புரட்சி புயல் அணி மூன்றாம் பரிசு பெற்றது.

பரிசு பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்க பண பரிசினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். இதில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண் ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, நகரக் கழகச் செயலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய செயலாளர் செந்துறை வடக்கு எழில்மாறன், அரியலூர் தெற்கு அன்பழகன், நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு வாலிபால் போட்டி கொடுக்கூர் கோபி பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Artist Century ,Kokudur Kobe Brothers ,Ariyalur ,Ariyalur District Dizhagagam Sports Development Work ,District ,Artist Century Valibal Competition ,Koogudur Kobi Brothers ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு...