×

கலைஞர் நூற்றாண்டு விழா மாணவர்களுக்கு கலை விழா போட்டிகள்

அரியலூர், செப். 25: அரியலூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு கலை விழாப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் தமிழ் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், டாக்டர் கலைஞரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி, பகுத்தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர், சமூகநீதி காவலர், நிர்வாக சீர்திருத்தம் கலைஞர் உருவாக்கிய சட்டம், தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர், பெரியார் வாழ்வில் கலைஞர், கலைஞர் ஆட்சியில் பெண்ணுக்கு நீதி, மகளிருக்கான சொத்துரிமை-கலைஞரின் சமூக புரட்சி, தலை நிமிர்ந்த தமிழகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, ஒவியப்போட்டிகள், வினாடி வினாப் போட்டிகள், குறும்பட போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கலைவிழா போட்டிகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளிலும், 10 கல்லூரிகளிலும் நடத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் அளவிலான கலை விழா போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 459 மாணவ, மாணவியரும், கல்லூரிகள் அளவிலான கலை விழாப் போட்டிகளில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 431 மாணவ, மாணவியரும் கலந்துகொண்டனர். மேலும், கலை விழாப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

எனவே, மாணவ, மாணவிகள் இதுபோன்ற போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறனை மேம்படுத்தி கொள்வதுடன் தமிழறிஞர்கள், தமிழுக்கு தொண்டு செய்த தலைவர்கள் குறித்தும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் ஆலத்தூர் ஒன்றியம் ராமலிங்கபுரம் ஊராட்சியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தை பசுமை போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக மாற்றுவதற்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் மரக்கன்றுகளை நட்டுமுறையாக பராமரித்து வளர்க்க வேண்டும்

The post கலைஞர் நூற்றாண்டு விழா மாணவர்களுக்கு கலை விழா போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary ,Ariyalur ,School Education Department ,Dr. ,Kalyan ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா...