
பெரம்பலூர், செப்.25: பெரம்பலூர் தீரன்நகரில் வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடம் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது பற்றி விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும். சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்குவதால் விபத்துகளை தவிர்க்கலாம் சாலை விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுமே தவிர சாலை விதிகளை பின்பற்றுவதால் விபத்துகள் எங்கும் ஏற்பட்டதில்லை. எனவே சாலை விதிகளை கட்டாயம் பின் பற்றவேண்டும்.
மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செல்லும் மாணவர்களுக்கு, வாகன ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்குவது குற்றமாகும் என்பதை பெற்றோர்கள் கட்டாயம் அறிவுறுத்த வேண்டும். அத்தகைய விதிமீறலில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பெற்றோர்களே குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என அறிவுரைகள் வழங்கினார்.
The post ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு தண்டனை appeared first on Dinakaran.