பெங்களூரு: பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ள நிலையில், பிராண்ட் பெங்களூரு திட்டத்திற்கு தீங்கிழைக்கும் வகையில் இந்த போராட்டத்தை நடத்தி தவறிழைக்கக்கூடாது என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதால், கர்நாடகாவில் பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராம்நகர், சாம்ராஜ்நகர், உடுப்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை பெங்களூருவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதால் என்ன கிடைக்கப்போகிறது?. மாநில விவசாயிகளின் நலனை காப்பதில் அரசுக்கு அக்கறை இருக்கிறது. அதற்காக அரசு தீவிரமாக செயல்பட்டும் வருகிறது. பெங்களூருவாசிகளின் நலனுக்காகவும் அரசு உழைத்து வருகிறது. அதெல்லாம் புரிந்துகொள்ளாமல் போராட்டக்காரர்கள் செயல்படுகின்றனர். பிராண்ட் பெங்களூரு திட்டத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. அது நமது இதயத்தை நாமே காயப்படுத்துவதாக அமையும் என்றார்.
The post பெங்களூருவில் முழு அடைப்பு நடத்துவதால் என்ன பயன்?: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் எச்சரிக்கை appeared first on Dinakaran.