திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்பட்டு வந்த ரூ.2 கோடி மதிப்பிலான மின்சார பஸ் ஒன்று நேற்று காணாமல் போனது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் அதிகாலை 3 மணிக்கு ஜி.என்.சி. சோதனை சாவடியை தாண்டி மர்ம ஆசாமி பஸ்சை ஓட்டி செல்வது பதிவாகியிருந்தது.
இதனால் தேவஸ்தான அதிகாரிகள் திருமலை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பஸ்சில் உள்ள ஜிபி.எஸ் கருவியை கொண்டு பஸ்சை தேடி வந்த நிலையில் நாயுடுப்பேட்டை- கூடூர் இடையே பிரதவாடா என்ற இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டு இருப்பதை அறிந்து நெல்லூர் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மின்சார பஸ் பேட்டரி சார்ஜ் தீர்ந்ததால், திருடிய ஆசாமி கீழே இறங்கி தப்பி ஓடியது தெரியவந்தது. திருமலையில் இருந்து திருடி செல்லப்பட்ட பஸ் 90 கிலோ மீட்டர் தொலைவில் நாயுடுப்பேட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பஸ் திருடிய ஆசாமி சார்ஜ் தீர்ந்ததால் இறங்கி ஓட்டம் appeared first on Dinakaran.