
- வடக்கு
- மண்டலம்
- சபை
- அமித் ஷா
- அமிர்தசரஸ்
- புது தில்லி
- வடக்கு மண்டல சபை
- அமிர்தசரஸ், பஞ்சாப்
- உள்துறை அமைச்சர்
- அமித் ஷா. ...
- வடக்கு
- தின மலர்
புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள அம்ரித்சரில் நாளை வடக்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கிறது. இதில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களான டெல்லி, ஜம்மு-காஷ்மீர், லடாக், சண்டிகர் ஆகியவை கலந்து கொள்கின்றன. நாட்டில் மொத்தம் 5 மண்டல கவுன்சில்கள் உள்ளன. அவற்றின் தலைவராக உள்துறை அமைச்சர் இருப்பார். கூட்டம் நடக்கும் மாநில முதல்வர் துணை தலைவராக இருப்பார்.
நாளை அம்ரித்சரில் நடக்கும் கூட்டத்தில், கலந்து கொள்ளும் மாநிலங்கள் தங்களுக்கிடையே உள்ள சிக்கல்களை விவாதித்து ஒருமைப்பாட்டுக்கு வரும். இந்த கூட்டத்தில் பக்ரா நங்கல் மின் திட்டம், சாலை கட்டமைப்பு, நீர்ப்பங்கீடு, கால்வாய் அமைப்பு, உள்கட்டமைப்பு போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
The post நாளை அம்ரித்சரில் அமித்ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சில் கூட்டம் appeared first on Dinakaran.