×

நீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை

 

கோவை, செப்.25: கோவை பாப்பநாயக்கன்பாளையம் காவேரி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவன மேலாளர். இவர் மனைவி பூரணி (55). இவர் தனது வீட்டில் யாருமில்லாத போது நிலத்தடி நீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூரணி கடந்த சில ஆண்டாக மன அழுத்த பாதிப்பினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிகிறது. நோய் பாதிப்பு குறையாத நிலையில் இவர் தவிப்பில் இருந்துள்ளார். வீட்டில் யாருமில்லாதபோது மன அழுத்தம் அதிகரித்து இவர் தற்ெகாலை செய்து கொண்டதாக தெரிகிறது.

The post நீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ramesh ,Kaveri Road, Papanayakanpalayam, Coimbatore ,Purani ,Dinakaran ,
× RELATED போதையில் லாரி ஓட்டிய டிரைவர் அதிரடி கைது