×

மதுரை, கோ.புதூர் லூர்து அன்னை ஆலய நன்றியறிதல் விழா

மதுரை, செப். 25: மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி, நன்றியறிதல் விழா நேற்று நடந்தது. திருச்சி சலேசிய சபையின் மாநிலத் தலைவர் அருட்தந்தை அகிலன் தலைமை வகித்து கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். பங்குதந்தை ஜார்ஜ், உதவி பங்குதந்தையர்கள் பாக்யராஜ், யூஜின், இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக அக்.1ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் பொன் மயமான ஆலயமே எனும் தலைப்பில் மறையுரை நிகழ்த்தப்பட்டு பொங்கல் விழா நடக்கிறது. நிறைவு விழாவாக வரும் 11ம் தேதி மதுரை மறை மாவட்ட ேபராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

The post மதுரை, கோ.புதூர் லூர்து அன்னை ஆலய நன்றியறிதல் விழா appeared first on Dinakaran.

Tags : Madurai ,Lourdes ,Shrine Thanksgiving Ceremony ,St. Lourdes ,Church ,Pudur ,Thanksgiving ,
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்