×

தூய்மை சேவை திட்ட விழா

காளையார்கோவில், செப்.25: காளையார்கோவில் ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குப்பையில்லா இந்தியாவை உருவாக்க தூய்மை சேவை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாணவ,மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளரான ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியை அமலதீபா வரவேற்றார். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் குப்பைகளை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். இதில் பணிக்கள பொறுப்பாளர் பவித்ரா, ஆசிரியர்கள் மீனாட்சி, ராஜபாண்டி, கமலம்பாய், சத்துணவு உதவியாளர் அஞ்சலை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

The post தூய்மை சேவை திட்ட விழா appeared first on Dinakaran.

Tags : Cleanliness Service Program Ceremony ,Kalaiyarkoil ,Kalaiyarkoil Union Keezhakottai Panchayat Union Middle School ,India ,Cleanliness Service Project Ceremony ,Dinakaran ,
× RELATED காளையார்கோவிலில் சேதமடைந்துள்ள சாலைகளால் அவதி: சீரமைக்க கோரிக்கை