×

சிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி

 

மானாமதுரை, செப். 25: மானாமதுரை வட்டாரம் குவளைவேலி கிராமத்தில் வேளாண்மை துறையினரின் அட்மா திட்டத்தின் கீழ் சிறுதானிய பயிர் சாகுபடி முறைகள் தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு மானாமதுரை வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர் தலைமை வகித்து சிறுதானிய சாகுபடி முறைகள், இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.

மதுரை விவசாய ஆலோசகர் ராஜேஷ் சிறுதானிய ரகங்கள், சிறுதானிய சாகுபடி முறைகள், உரம், பூச்சி மருந்து மேலாண்மை, விற்பனை செய்யும் முறைகள், சிறுதானியத்தில் உள்ள சத்துக்கள் குறித்து விளக்கினார். துணை வேளாண்மை அலுவலர் சப்பாணிமுத்து விதை நேர்த்தி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் தினேஷ், அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சதீஷ், வினோத் குமார் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post சிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Department ,Kulaiveli Village ,Dinakaran ,
× RELATED மானாமதுரை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்